Monday, July 30, 2012

வாழ்க்கை #2

கதிரேசன் காலையிலிருந்தே மிகவும் பரபரப்புடன் இருந்தான். மகளின் திருமணத்திற்காகத்தான் இந்த பரபரப்பு என அனைவரும் நினைத்தனர். அரசு பணியில் கடந்த 27 வருடத்தில் அவ்வப்போது பணம் வாங்கியிருந்தாலும் அந்த தொகை மற்றும் அதற்கான விதிமீறல்கள் இதனோடு ஒப்பிடும்போது மிகவும் சிறியது. நேற்று அலுவலக மேலாளர் கூறியது மனதிற்குள் ஓடியது கதிர் அமௌன்ட்-ஐ பொருளா வாங்கிக்குங்க, பேப்பர் கையெழுத்து ஆகறதுக்கு முன்னாலயே வாங்கிக்குங்க, பதட்டத்தையும், பயத்தையும் வெளிய காட்டாம நடந்துக்குங்க, அவ்ளோதான். ஒருநிமிடம் மனதை பெருமூச்சுடன் சரிசெய்துகொண்டு, தனது இரு சக்கர வாகனத்தை கிளப்பும்போது அப்பா நான் மண்டபத்துக்கு போய் ARRANGEMENT  CHECK பண்ணிட்டு அப்படியே BANK போயிட்டு வர்றேன், “சரி 10 நாள்ல கல்யாணத்தை வெச்சுகிட்டு ரொம்ப அலையாத, பார்த்து போ என்று மகளிடம் சொல்லிவிட்டு, கையில் வைத்திருந்த பையை ஒருமுறை திறந்து பார்த்து உறுதி செய்து கொண்டு, வண்டியை வேகமாய் செலுத்தினார்.

வண்டியை ஒரு உயரமான கட்டிடத்தின் ஓரமாக நிறுத்திவிட்டு, அந்த கட்டிடத்தின் பெயரை தலையை நிமிர்த்தி படித்தார்  “நா....ரா..............ன்மூன்றாம் மாடியில் ஒரு நுழைவாயிலை அடைந்து அதை தட்டினான். “Yes Sir“, “Mr.ராகவன்? ஒரு நிமிஷம் Sir” உள்ளே சென்று சில நிமிடத்தில் வெளியே வந்து Sir உங்களை கூப்பிடறார்


இங்க பாருங்க கதிரேசன் நீங்க பயப்படற அளவுக்கு எந்த பிரச்சனையும் இதில இல்லை, TIME பத்தாததால ஒரு வாரம் முன்னாலேயே CENTERING SUPPORT- REMOVE பண்றோம், அவ்வளவுதான், இதனால ஒன்னும் ஆயிடாது, நீங்க எல்லாம் முறைப்படி நடந்ததா ஒரு CERTIFICATE கொடுத்தாத்தான் எங்களுக்கு BILL - PASS ஆகும், அதனாலதான் உங்களை ஏற்பாடுபண்ண சொல்லவேண்டியதா போச்சு, கதிரேசன் தன்னுடைய பையில் இருந்த FILE-ஐ எடுத்து அதிலிருந்து சில பேப்பர்களை அவரிடம் கொடுத்தான், “உங்களை நம்பித்தான் இதை செய்யறேன், நீங்கதான் ஏதும் பிரச்சனை வராம பார்த்துக்கணும் ராகவன் அந்த தகவல்களை சரிபார்த்துக்கொண்டு, தன்னிடம் இருந்த ஒரு கவரை அவனிடம் தந்தார். நாங்க இந்தமாரி நெறைய பண்ணிருக்கோம், இதுல நீங்க கேட்ட LAND DOCUMENT இருக்கு சரிபார்த்துக்குங்க என்றார்.


பதட்டம் குறைந்த நிலையில், தனது வண்டியை எடுத்தான், தனது பையில் இருந்த DOCUMENT-ஐ ஒருமுறை சரிபார்த்துக்கொண்டார். தான் விரும்பியபடி, தனது மகளுக்கு ஒரு உயர்ந்த இடத்தில் திருமணம் நடப்பதற்காக, அவர்களுக்கு அதிகமாக வரதட்சணை தரவேண்டி வந்ததும், அதற்காக இந்த LAND-ஐ லஞ்சமாக கேட்டுப் பெற்றதும் மனதுள் ஓடியது. எனினும் வேலை முடிந்ததால், உள்ளுர மகிழ்ந்தான். போன் அழைத்தது, எடுத்து பேசினான் மறுமுனையில் என்னங்க நம்ம பொண்ணுக்கு கல்யாண மண்டபத்துல அடி பட்டிருச்சு, அவளை மண்டபத்துக்கு எதிருல இருக்குற ஆஸ்பத்திரில சேத்துருக்காங்கலாம் நான் அங்கேதான் போயிட்டிருக்கேன், நீங்களும் வந்துருங்க அழுகையுடன் சொல்லி, பதிலுக்காக காத்திராமல் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கதிரேசன் உடல் வியர்க்க, கை கால் நடுங்க, பலமான இதய துடிப்புடன் ICU வாசலில் நின்றிருந்தான். சிறிது நேரத்தில் உள்ளிருந்து கடவுளின் மறுவுருவமாக கருதப்படும் DOCTOR வந்தார். பயப்படாதீங்க ஒண்ணும் இல்ல, கால் எலும்பு FRACTURE ஆயிருக்கு, மத்ததெல்லாம் சின்ன காயம்தான், 2 நாள்ல GENERAL WARD போயிரலாம், ஆனா, கால் சரியாக மூணு மாசம் ஆகும். ஓரளவு நிம்மதியுடன் அமர்ந்தார், “நீங்கதான் அந்த பொண்ணோட அப்பாவா? நிமிர்ந்ததில் போலீஸ்காரர் வாங்க என்னோட போலீஸ்காரருடன் எதிரில் இருந்த மண்டபத்திற்குள் நுழைந்தார். "உங்க பேர்தான் கதிரேசனா, இங்க பாருங்க கதிரேசன் இந்த மண்டபத்தோட கூரையை REPAIR பண்ண சாரம் கட்டிருக்காங்க, அவசரமா வேலையை முடிக்கணுங்கரதுகாக அரைகுறையா கட்டிருக்காங்க, உங்க பொண்ணு வந்தப்ப சாரம் ஒடஞ்சு விழுந்து அடிபட்ருச்சு, இவர்தான் அந்த CONTRACTOR, “சார் போனது போகட்டும், நான் உங்க ஆஸ்பத்திரி செலவை ஏத்துக்கறேன், ஒரு AMOUNT கொடுக்கறேன்கேஸ் எல்லாம் வேண்டாம் சார் ப்ளீஸ் கதிரேசனுக்கு சுரீரென கோபம் வந்தது யோவ் உங்களால என் பொண்ணு கல்யாணம் நிண்ணு போச்சுய்யா, இந்த கல்யாணத்திக்காக நான் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்ல, நான் உங்கல சும்மா விடமாட்டேன் என விம்மிய குரலுடன் கத்தினார். சார் தப்பு எங்க பேர்ல மட்டும் இல்ல, இங்க பாருங்க தடுப்பக்காக BAND கட்டி, SAFETY MEASURES எல்லாம் பண்ணிருக்கோம், கோர்ட்டுக்கு போனா உங்களுக்கு இதுவும் கிடைக்காது என ஒரு BOARD  காட்டினார். DO NOT CROSS – MEN AT WORK என அதில் எழுதப்பட்டிருந்தது, மேலும் அதன் கீழே சிறியதாய் எதோ எழுதியிருக்க கதிரேசன் அருகில் சென்று அதை படித்தான் நா....ரா.....ய.....ண....ன்

எளிமை படுத்தப்பட்ட கேயாஸ் தியரியை (CHAOS THEORY), மேற்கண்ட கதைமூலம் நாம் உணரலாம். நம்முடைய செயல்கள் நம் எண்ணங்களினால் விளைந்தது, விளைவுகள் செயல்களினால் விழைந்தது. ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கும் வாழ்வியல் முறையில் ஒருவரது செயலில் உள்ள தவறு அவரையோ அல்லது அவர் சார்ந்த மற்றவரையோ நிச்சயம் பாதிக்கும். நம் தவறுகள் நம்மை நேரடியாகவும் உடனடியாகவும் பாதிப்பதில்லை என்பதினால், நாம் செய்யும் தவறுகளினால் மற்றவர்களும், இதே எண்ணம் கொண்ட மற்றவர்களால் நாமும் பாதிப்படைகிறோம். மிக எளிய உதாரணம் நம் அனைவராலும் நமக்கு ஏற்பட்டுத்தபட்ட நீர் மற்றும் காற்று மாசுபாடு.


பள்ளி வாகனத்தில் இருந்த ஓட்டை வழியாக ஒரு குழந்தை விழுந்து தன் உயிரை விட்டு, தற்போது தமிழ் நாட்டில் பள்ளிவாகனங்களை சீர்படுத்த வேண்டியிருக்கிறது. கும்பகோணத்தில் தீ விபத்தின் மூலம் குழந்தைகள் இறந்ததை யாரும் மறந்திருக்க மாட்டோம் எனினும் இன்றும் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளும், கல்லூரிகளும் நம்மிடையே உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. அடுத்த சுவாரசியமான நிகழ்ச்சி நடக்கும் வரை நாம் திருந்துவதும், பிறகு வழக்கம்போல் தவறு செய்வதும்தான் நம்மிடம் உள்ள மிகக்கொடுமையான வழக்கம். இன்று நம்மிடையே கீழ்க்கண்ட எதுவும் சுத்தமானதாக இல்லை என்பது (சில விதிவிலக்குகள் தவிர [THAT TOO < 2%]) நிச்சயம் நாம் வெட்கப்படவேண்டிய ஒன்று.


மழை நீர், நிலத்தடி நீர், சுத்திகரிக்கப்பட்ட நீர், காற்று.

அரசு, அலுவலகங்கள், அதிகாரிகள்.

டாக்டர்கள், மருந்துகள்.

சட்டம், நீதி, காவல் துறை.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்.

உழைப்பு, முன்னேற்றம்.

தனிமனித எண்ணம், ஒழுக்கம்.

ஆன்மிகம், சமயம், கலை, இலக்கியம், மொழி.

விளையாட்டு, பொழுதுபோக்கு.

உறவுகள்.

உணவு, தானியபொருட்கள்.
கல்வி, சமுதாயம், பொருளாதாரம்.  
கடைசியாக, எதிர்காலம்.


கல்வி, எண்ணங்களை சீர்படுத்தவும், முறையாக வெளிப்படுத்தவும் எனக்கு கற்றுத் தந்திருக்கிறது. அனால் அத்துடன் நின்றுவிடாமல் ஓரளவாவது அதை செயல்படுத்த நான் முயலவேண்டும், அதலால், அதன் முதல் படியாக கல்விகற்க வசதியற்ற சில குழந்தைகளை தெரிவு செய்து அவர்களுக்கு உதவ முயல்கிறேன். இதுவரை ஏறக்குறைய எந்த நல்ல காரியத்தையும் செய்யாத என் குறைபட்ட வாழ்க்கையின் ஓட்டை இதன் மூலம் அடைக்கப்படும் எனவும், எனது இந்த வாசகங்கள் எனக்கு உந்து சக்தியாக செயல்படும் என நம்புகிறேன்.


புவன் - யுவனுக்காக
முனுசாமி