Thursday, August 9, 2012

தலைப்பை தேடி.....#1


கொடுமையில் கொடுமை ENGINEER-ஆக இருப்பது
அதனினும் கொடுமை CIVIL ENGINEER-ஆக இருப்பது
அதனினும் கொடுமை படித்ததை அரைகுறையாக ஞாபகம் வைத்திருப்பது

கோயம்பத்தூர் சென்னை VOLVO A/C  பேருந்து - SEMI-SLEEPER - ON-LINE மூலம் பதிவு செய்யப்பட்ட பயணசீட்டை, பேருந்தில் அமர அனுமதிக்கும் போதுதான் முழுமையாக நம்பமுடிகிறது, ஏனென்று தெரியவில்லை - அனைத்து சாலைவிபத்து நிகழ்வுகளும் மனத்திரையில் வேகமாய் ஓடியதை என்னால் தடுத்து நிறுத்த முடியவில்லை – வேறு வழியில்லாமல் நானும் சாமி கும்பிட்டேன் - பேருந்து எடுக்கும் வரை என் சீட்டுக்கு வேறுயாரும் சண்டைக்கு வராதது, கடவுள் எனக்கு அளித்த முதல் வரமாய் நம்பினேன் – இரண்டு சீட்டு தள்ளி இதே சண்டை நடந்ததை என் மனம் ரசித்தது ஏன் என்று தெரியவில்லை – வண்டியின் உயரமான இடத்தில் நாம் அமர்வது நல்லதா? - ஒரு வழியாக வண்டி கிளம்பியது

நகர்புறத்தை தாண்டி பேருந்து வேகமெடுத்தது - வேகமாக வேறொரு வண்டியை CUT அடித்தார் ஓட்டுநர், CUT என்பது வேகமாக வளைத்து மற்றொரு வண்டியை தவிர்ப்பது (பெரும்பாலும் விபத்துகள் இந்த சமயத்தில்தான் நிகழ்கின்றது) - என்னுள் அதுவரை உறங்கிய(?) ENGINEER விழித்ததை நான் சற்றும் விரும்பவில்லை – வண்டியின் வேகம் தோராயமாக மணிக்கு 60 – 80 km – கட் அடிக்கும் போது வண்டியின் இயக்கம் SIMPLE HORMONIC MOTION (SHM) ஆக இருக்கும், மேலும் இதனால் வண்டியின் மேல் மைய விலக்கு விசை (CENTRIFUGAL FORCE) செயல்படும் – இது வண்டியின் வேகம் மற்றும் திரும்பும் ஆரம் (RADIUS) இவற்றை பொறுத்து அமையும் – வண்டியில் உயரமான இடத்தில் நாம் அமர்வதால் வண்டியின் CENTRE OF GRAVITY புள்ளி உயர்கிறது – மிக வேகமாக கட் அடிக்கும் போது மைய விலக்கு விசை உயர்கின்றது – வண்டியின் பாரம் மற்றும் மைய விலக்கு விசை ஆகியவற்றின் RESULTANT வண்டியின் நான்கு சக்கரங்களுக்கு மத்தியில் விழும்போது வண்டி பாதுகாப்போடு செல்கிறது - மைய விலக்கு விசை உயர உயர RESULTANT வண்டியின் நான்கு சக்கரங்களிருந்து விலகி விழும் இது நமக்கு மறுநாள் தினத்தந்தியில் இடம் ஒதுக்க வழி செய்கிறது – விலையுயர்ந்த SUV வண்டிகளில் சக்கரங்கள் வெளிப்புறம் தள்ளியிருக்க இந்த STABILITY CRITERIA தான் காரணம் 

ஒருவழியாக அடுத்த சில மணி நேரத்தில் வண்டியின் பாதுகாப்பு குறித்த என் கணக்கீடுகள், குழப்பத்தின் உச்சத்தை அடைந்து, முடிவு எட்டப்படாமலே முடிந்தது – அரைகுறை துக்கத்துடன் சென்னை என்னை வரவேற்றது – அனைவரும் பாதுகாப்பாக வந்து சேர்ந்ததற்கு சாமி கும்பிட, நானும் கும்பிட்டேன் இனிமேல் பயணம் செய்யும் போது என் குறைபட்ட அறிவை அழித்திட வேண்டும் என்று.

கொடுமையில் கொடுமை ENGINEER-ஆக இருப்பது
அதனினும் கொடுமை CIVIL ENGINEER-ஆக இருப்பது
அதனினும் கொடுமை படித்ததை அரைகுறையாக ஞாபகம் வைத்திருப்பது
.....................................................................*
இந்தியாவில் தற்போதுள்ள கல்விமுறையில் நாம் மாணவர்களுக்கு அதிக அளவிலான தகவல்களை கற்பிற்கின்றோம் அனால் சுவாமி விவேகானந்தா கூறியது போல் வெறும் தகவல்களை சேகரிப்பது கல்வியன்று. உதாரணமாக நியுட்டனின் மூன்று இயக்கவியல் விதிகளும் நம் மாணவர்களில் அநேக பேர்க்கு தெரிந்திருக்கலாம் அனால் அதன் அர்த்தம் தெரிந்தவர்கள் மிக மிக சிலரே. இந்த விதிகளின் முக்கியத்துவம் உயர் படிப்பு மேற்கொள்பவர்களுக்கு மட்டும் தெரிவது நம் கல்வி முறையின் தோல்வியே. மாணவர்களிடையே நியுட்டன் மற்றும் திருவள்ளுவர் முறையே 2 மற்றும் 5 மதிப்பெண் அளவே தகுதி பெற்றிருப்பது நாம் வளராததற்கு மிக முக்கிய காரணம் என கருதுகிறேன். 


என்னுடன் பணியாற்றும் இத்தாலிய நண்பருடன் உரையாடும் பொழுது, அவர்களது நாட்டில் பொறியியல் பட்டம் பெறுவது மிகவும் கடினம் என்றும் சிலருக்கு பட்டம் பெற முதல் 10 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்ளும் எனவும் கூறினார். அந்நாட்டில் ஆண்டுகள் பணிபுரிந்த ஒருவர் இங்கு 10 ஆண்டுகள் பணிபுரியும் ஒருவருக்கு உயரதிகாரியாய் இருப்பது அவர்களது மற்றும் நமது கல்விமுறையின் நிலைமையை தெளிவாக உணர்த்துகிறது. அளவுக்கு அதிகமான சுமையை குழந்தைகள் மீது சுமத்தி, எதுவும் புரியாமல் அதிகமாக கற்பிற்கப்படுவதை விட, குறைவாகவும், தீர்க்கமாகவும் கற்பிற்கப்படுவதே சிறந்தது. இதற்கு முறையான அரசின் திட்டமும், பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளும், ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சியும் தேவை. அதன்பின் மாணவர்களின் அறிவை சோதிக்கலாம்.


புவன் - யுவனுக்காக
முனுசாமி