Monday, April 1, 2013

வைணவ கமல்ஹாசன்


தன்னை ஒரு நாத்திகவாதியாக காட்டிக்கொண்டிருப்பது உண்மைதானா என்னும் ஐயம் எனக்கு வெகு காலமாக உண்டு. கமலின் சொந்த தயாரிப்புகளில் (இயக்கமும் சேர்த்து) அவரது வைணவ வெளிப்பாடுகளை என்னால் உணர முடிந்தது. இதை பார்பன வெறி என கமலின் எதிரிகள் பயன்படுத்தியது உண்டு. எனக்கு அந்த எண்ணம் இல்லை.

கடவுள் என்பது ஒருவனுடைய அந்தரங்க விருப்பம் அதில் மற்றவர்களுக்கு இடம் இல்லை அதேபோல் மற்றவர்களுடைய பக்தி மார்கத்தில் நமக்கும் இடம் இல்லை. என் வாதம் கமல் தன்னை வைணவம் சார்ந்தவராக காட்டிகொள்ளாமல் விமர்ச்சனதிர்க்கு பயந்து ஏன் நாத்திகனாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதே.

ஹேராம் - படத்தில் தன்னை ஒரு பார்பன இந்துவாகவும், வைணவ மரபின் படி, ராமர் அவதாரமாக தன்னை நினைத்து கெட்டவைகளை அழிக்க புறப்பட்டதாகவும் காட்டுகின்றார். உண்மையில் நடந்த நிகழ்ச்சியா? அல்லது புனைவு தானா? எவ்வாறு இருந்தாலும் திரைப்படத்தில் மாற்றி காட்டியிருக்கலாம். ஏன் முயற்சிக்க வில்லை? அல்லது திட்டமிட்டு அமைக்கப்பட்டதா?

தசாவதாரம்மகாவிஷ்ணுவின் அவதாரங்களை, வைணவ குடும்பகளை மையமாக வைத்து, உலகின் அழிவிலிருந்து பெருமாள் காப்பதாக காட்டி விட்டு, கடவுள் இல்லை என்பதை வார்த்தைகளால் மட்டும் சொல்லும் படம். நாத்திக வாதியாக படம் எடுக்க கடவுள் பற்றிய எந்த அடையாளமும் இன்றி காட்சிகளை அமைக்க கமலால் முடியும் என்பது நாம் அறிந்ததே.

விஸ்வரூபம்ஒரு இந்துவா முஸ்லிமா எனும் விளக்கமும் அற்ற நாயகனின் வைணவ பெயர் விஸ்வநாத். படத்தின் பெயரும் வைணவ கடவுளுக்கு மட்டும் பொருந்தும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எந்த ரூபமும் எடுக்க முடியும் என்றும் தீயவைகளை அழிக்க தேவைப்படும் போது தன்னை மாற்றிக்கொள்வதாக பாட்டு மற்றும்  படமும் அமைக்கப்பட்டுள்ளது. தான் செய்து கொண்டிருக்கும் காரியங்களின் விளைவுகளை நன்கு அறிந்தவர் கமல். ஏன் வேறொரு கடவுளை மையப்படுத்தாமல் வைணவத்தை இவர் போற்ற வேண்டும்? ஏன் அதை மறைக்க வேண்டும்?.

புவன்  யுவனுக்காக
முனுசாமி