Saturday, June 23, 2012

வாழ்க்கை

நாம் மிகவும் வேகமாகவும், தீர்க்கமாகவும் போய்க்கொண்டிருக்கிறோம். அனால், பாதை சரியானதுதானா?

தொலைபேசியை கண்டுபிடிக்கும் முன் அதன் இன்றைய பிரம்மாண்ட வளர்ச்சியை யாரும் கணித்திருக்க மாட்டார்கள். இருந்தாலும் தொலைத்தொடர்புத் துறை இந்த அளவு இந்தியாவில் வளர்த்திருக்க வேண்டாம். தொலைபேசி வர்த்தகம் உலகளவில் 2 % குறைந்த போதும் இந்தியாவில் அது 6 % வளர்ந்துள்ளது. இந்திய தொலைத்தொடர்புத் துறையில் நடந்த ஊழல் உலகையே மிரள வைத்தது என்றால் அது மிகையாகாது.

பள்ளியிலேயே மொபைல் மூலம் தவறாக வீடியோ எடுத்த செய்தியும் நாம் அறிந்ததே. இச்சாதனங்கள் எல்லாம் கண்டுபிடிக்கும் முன்னர் படிப்பு என்பது தரமானதாகவும், எளிதாகவும், வலிமையாகவும் இருந்ததை யாரும் மறுக்க முடியாது. இன்று அனேக மாணவர்கள் பள்ளியிலேயே மொபைல் ஆகிறார்கள். இல்லாத சிலர் பெரும் விரக்தியில் வாழ்வின் ஓரத்திற்கு சென்றுவிடுகிறார்கள், சிலர் மனவலிமையுடன் தங்களுக்கான நேரம் வரும் வரை காத்திருக்கிறார்கள். மொபைல் இவர்களிடத்தில் நோபலுக்கான இடத்தை எப்படியோ பெற்றுவிட்டது

இன்று மொபைல் போன் மூலம் பரிமாறப்படும் தகவல்களில் அதிகமானது, தவறானது என்பதும், இதற்காக நாம் செலவழிக்கும் நேரமும், பணமும் நம் வாழ்கையை பின்னுக்கு இழுப்பதும் பலரால் அறிந்த, சிலரால் அறியாத உண்மை. மாணவ பருவத்தில் நிகழும் அநேக தவறுக்கு மொபைலும் ஒரு காரணம்.

சிறு சிறு தவறுகளை பெரிதாக்குவதால் எந்த பலனும் இல்லை. ஆம் அனால் இந்த சிறிது என்பது அளவால் அமைவது இல்லை ATTITUDE-ஆல் அமைவது.

1. கிண்டல் - ராகிங் - ஈவ் டீசிங்
2. பணம் - வரதட்சனை கொடுமை - உயிருடன் எரிப்பு
3. Power bike - Super hero - வாகன விபத்து - உயிரிழப்பு
4. காதல் - காமம் - கற்பழிப்பு - கொலை
5. Adjustment - அன்பளிப்பு - லஞ்சம் - ஊழல் - சுவிஸ் வங்கியில் கோடிகள் 

மேலே குறிப்பிட்ட எதுவும் மிகைபடுத்தபட்டது அல்ல. நாம் தினமும் செய்திதாள்களில் படிப்பதே ஆகும். நாம் சம்மந்தப் படாதவரை அவை நமக்கு வெறும் செய்திகளாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலே கூறப்பட்ட செய்திகள் கீழே உள்ள நிகழ்வுகளாக, அதுவும், நமக்கு நடக்கும் போதுதான் நாம் அதன் சுயரூபத்தை உணர்கிறோம்.

1. கல்லூரிக்கு சென்று முதல் மாத முடிவில் ஒருநாள், ஆசையாய் கேட்ட Contact Lens - வாங்கி வைத்து, வருகைக்காக வாசலை நீங்கள் பார்க்கும் நேரம், மகன்/மகள் கல்லூரியில் அசம்பாவிதமாக இறந்து விட்டதாக செய்தி வந்தால்,
2. திருமணமான 8 ஆம் நாள் புகுந்த வீட்டின் சமயலறையில் மகள் கரிக்கட்டையாக கிடப்பதை பார்க்கும் போது,
3. விளையாட சென்ற பிள்ளையை தேடி, ICU - ல் கண்டெடுக்கும் போது,
4. காதல் வற்புறுத்துதலால், முகத்தை ACID - க்கு பலிகொடுக்கு போது,
5. திருவிழாவில் பிள்ளை தொலைந்து, பசிக்கொடுமையால் பிச்சை எடுக்கும் போது,

தவறு செய்பவர்களை கண்டிக்கும், தண்டிக்கும் எண்ணம் நாம் நேரடியாக பாதிக்கப்போது தான் நமக்கு வருகின்றது. அனால் இந்த தவறுகளுக்கு, நம்முடைய இந்த ATTITUDE-ம் ஒரு காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது. சாவும், துக்கமும் அனைவருக்கும் பொதுவானதுதான், அனால் ஒருவரின் சுவிஸ் வங்கி கணக்கை உயர்த்த 1000 பேரை பட்டினிக்கு பலியிடுவது......?

மாற்றப்படவேண்டியது தனிமனித எண்ணங்களும் அதனால் விழைந்த பழக்கங்களும். இதுவே சமுதாய சிந்தனை மற்றும் செயல்பாடுகளை தீர்மானிக்கின்றது....

நாம் அன்றாட வாழ்கையில் நிகழும் பல நிகழ்வுகள் கேள்விக்குரியதாய் ஆகிவிட்டது. பின்வரும் சிலவற்றிக்கு நாம் தற்போது கொடுக்கும் இடமானது சரியானதுதானா?

1. CELL PHONE - அவசர மற்றும் அத்யாவசியத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கருவி தற்போது முதலிடம் பிடித்துள்ளது நம் பட்டியலில்.
a) CELL PHONE இல்லாமல் இருத்தல்
b) அவசியமான தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் பயன்படுத்துதல்
c) தேவையான அளவு தகவல் மற்றும் பொழுது போக்கிற்காக பயன்படுத்துதல்
d) எப்பொழுதும் பயன்படுத்துதல் (என் நண்பர் ஒருவர் Toilet - போவதற்கு Alarm வைத்துகொள்கிறார் mobile -ல்)
e) Mobile Network - யே அலறடிக்கும் அளவிற்கு பயன்படுத்து.

2. T.V - அனைத்து வீடுகளிலும் உள்ள செல்லமான IDIOT BOX
a) நாளொன்றுக்கு 1 மணி நேரம் அதற்கும் கீழ்
b) நாளொன்றுக்கு 3 மணி நேரம்
c) நாளொன்றுக்கு 6 மணி நேரம்
d) நாளொன்றுக்கு 10 மணி நேரம் அதற்கும் மேல்

3. COMPUTER - பொதுவாக தொழில்/கல்வி சார்ந்த உபயோகத்தில் இதை நாம் எடுத்துக் கொள்ளலாம்
a) அனைத்திற்கும் Comp உதவியை நாடுவது, மேலும் அதன் அடிப்படையை தெரிந்து கொள்ளாதது
b) வேண்டிய வேலைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது, அதன் நுட்பங்களை அறிய முற்படுவது
c) Comp செய்யும் அனைத்தையும் செய்ய முயன்று தோற்பது/எப்போதாவது வெல்வது

4. SHOPPING - எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் நாள் முழுக்க MALL -லிலேயே கழிக்க விரும்புபவர், அவர் தனது சொந்த வீட்டை விட்டு MALL -லுக்கு அருகில் வாடகைக்கு சென்றுவிட்டார்
a) எப்பொழுதும் "OUTING"-ல் இருக்கணும்
b) அடிக்கடி ஷாப்பிங் போகணும்.
c) எப்போதாவது போகணும்
d) போகவே கூடாது

5. MONEY - பணம் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை அனால்
a) SWISS BANK -ல் ACCOUNT [இதை எப்படி நான் தமிழ்ல எழுதுவேன்]
b) அம்மா, அப்பாவிடம் "இந்தமாசம் ரொம்ப பணக்கஷ்டம் அடுத்த மாசம் பணம் தர்ரேன்" என்ற நிலையில் சொந்தமாக ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டுதல்.
c) சரியாக சாப்பிடாமல் பணத்தை சேமிப்பது.
d) சேமிக்க முயலாதது
e) டாஸ்மாக் ல் Account வைப்பது

காதல், விளையாட்டு, நாகரீகம், மற்றும் பல அடுத்த பதிவில்.

மேற்கூறியவற்றில் நான் 1-c ), 2-a), 3-a), 4-d), 5-c)-ல் இருக்கிறேன். 1-b), 2-b), 3-b), 4-c), 5-d) -ல் இருக்க விரும்புகிறேன். உங்கள் விருப்பத்தை Comment-ல் இடவும். நம்முடைய இந்த செயல்களுக்கு தக்கவாறு பலன் கிடைப்பது நிதர்சனம். இருப்பினும் நம்மால் சில சமயம் நம் செயல்களை மாற்றிக்கொள்ள முடிவதில்லை.

நாம் வாழ்வின் வெற்றி தோல்விகளை தீர்மானிப்பது நம் முன் உள்ள வாய்ப்புகளுக்கு நாம் தரும் வேறுபட்ட முக்கியத்துவமே ஆகும். உதாரணமாக அதிகமாக Cricket பார்பவர்கள் சச்சின் அல்லது Play ground Watch man ஆகலாம், அதிகமாக Cinema பார்பவர்கள் ரஜினி அல்லது Cinema Theatre சீட்டு கிழிப்பவராக ஆகலாம். அதிகமாக Cell Phone நோண்டுபவர்கள் Steave Jobs அல்லது Cell Phone கடை எடுபுடி ஆகலாம். அதிகமாக படிப்பவர்கள் Engineer அல்லது பைத்தியம் ஆகலாம். படிக்காமல் பீடி வலி(குடி)த்தவர்கள் மந்திரி அல்லது பிச்சைக்காரன் ஆகலாம். அகவே நம் செயல்கள் நிச்சயம் நம் பாதையை தீர்மானிக்கிறது. கடவுள் தன் கையில் வைத்திருப்பது, நாம் சென்றடைவது Upper Limit-கா? Lower Limit-கா? எனும் முடிவு மட்டும்தான். தவறான பாதையில் செல்பவரும் சரியான பாதையில் செல்பவரும் Upper Limit- நோக்கியே செல்கின்றனர். அனால் சரியான பாதையில் செல்பவருக்கு பெரும்பாலும் முடிவு சரியாக அமைகிறது சில விதிவிலக்குகள் தவிர. ஆம் வாழ்க்கை STATISTIC – பின்பற்றுகின்றது. விதிவிலக்குகள் STANDARD DEVIATION – ஆக அமைகின்றது.

புவன் - யுவனுக்காக
முனுசாமி

(அடுத்து: வாழ்க்கை #2 \ 29-06-2012)
தங்களின் கருத்துக்களை Comments-ல் இடவும். (கேள்விகள் வரவேற்கப்படுகின்றன)

Friday, June 15, 2012

இரட்டையர்கள் II


இரட்டையர்களில் ஒருவரை அடித்தால் மற்றொருவருக்கும் அதே இடத்தில் வலிக்கும் என்பது ஒரு திரைப்பட அணு விஞ்ஞானம் அனால் உண்மையில் இருவருக்கும் இடையே சுவாரசியமான சில ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் உள்ளது

மனிதனின் குணாதிசயத்தை தீர்மானிப்பது பிறப்பா அல்லது வளர்ப்பா (Nature or Nurture) என்பது ஒரு மாபெரும் விஞ்ஞான விவாதம். அறிவியலர்கள் இரு பிரிவாக நின்று பிறப்பினாலேன்றும், வளர்பினாலேன்றும் விவாதிட்டனர். இமானுவேல் காண்ட், பிரான்சிஸ் கால்டன், நவம் சாம்ஸ்கி ஆகியோர் பிறப்பிக்கும், ஜான் லாக், பாவ்லாவ், சிக்மண்ட் ப்ராய்டு வளர்பிர்க்கும் வாதிட்டனர். மேலும் குழப்பத்தை அதிகப்படுத்தாமல், ஜீன் பற்றிய விளக்கமான ஆராய்ச்சியை (எனக்கு தெரியாததால்) விட்டுவிட்டு இரட்டைக் குழந்தைகளிடம் நான் கவனித்ததை இங்கு சொல்கிறேன்

வார்த்தைகளின் உச்சரிப்ப்பு - உதாரணமாக சைக்கிள் என்பதை "சீச்சி" என்று எனது இரு குழந்தைகளும் உச்சரிப்பார்கள் இது ஒருவன் சொல்வதை மற்றொருவன் கேட்பதால்தான் என்று சொல்லிவிட முடியாது ஏனெனில் இதே வார்த்தையை மற்றொரு குழந்தை நிச்சயம் வேறுமாதிரிதான் உச்சரிக்கும். இதேபோல் ஏறக்குறைய அனைத்து வார்த்தைகளையும் இருவரும் ஒரே மாதிரி உச்சரிப்பார்கள். சில நேரங்களில் அவர்கள் தங்களுக்குள் நிறைய பேசிக்கொள்வார்கள் எங்களுக்கு புரியாமல் (என்னை அடிப்பதற்கான திட்டமாக கூட இருக்கலாம்)

பழக்கவழக்கங்கள் மற்றும் அசைவுகள் - இருவரும் ஒரே மாதிரி கால்களை மடக்கி அமர்வார்கள் ஒருவரை மற்றொருவர் பார்பதனால் என சொல்ல முடியாது ஏனெனில் அவர்கள் தூங்கும் பொது அருகில் இருக்கும் என்னிடம் தங்கள் முதுகை அணைத்து தூங்குவதே இருவரின் வழக்கம் நிச்சயம் அவர்களது உள்ளுணர்வு ஒரே எண்ணத்துடன் செயல்படுகிறது என இதன் மூலம் நம்பலாம்.

விருப்பங்கள் - குழந்தைகள் அனைவரும் பொதுவாக இனிப்புகளை விரும்பி உண்பார்கள். முதலவனும் அப்படியே அனால் இளையவன் பொதுவாக பழம் மற்றும் வழவழப்பான பொருட்களை தின்பதில்லை. விளையாட காரும், கரடியும் கேட்கின்றனர் மாற்றி வாங்கிகொடுத்தால் வர்மக் கலையை பயன்படுத்துகிறார்கள். விருப்பங்கள் வேறுபடுகின்றன

சிந்தனைகள் - சொல்வதை கேட்க முயலும் மற்றும் கேட்காமல் அடம் பிடிக்கும் வேறுபட்ட வழக்கம் உண்டு. இறுதியல் ஒரே மாதிரி PERFORM-செய்தாலும் இருவரின் செய் முறைகள் பெரிதும் வேறுபடுகின்றன உதாரணமாக படிப்பது, வேலை செய்வது......ஆகியவற்றில் வேறுமாதிரி சிந்திக்கிறார்கள்.

அடிப்பது - வேறு வேறு STYLE- ல் அடித்தாலும் ஒரே அளவு மற்றும் அடிக்கும் நோக்கத்தை கொண்டிருக்கிறார்கள் (யாருங்க அது இதெல்லாம் VALID POINT இல்லைன்னு சொல்றது)

அடிப்படையான சில ஒற்றுமைகள் இருந்தாலும் பின்னாட்களில் வளரும் போது அவர்களது விருப்பம், தேர்தெடுக்கும் பாதை மற்றும் செயல்படும் களம் ஆகியவை இருவரின் அடையாளங்களை வேறுபடுத்தி காட்டுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதென நான் கருதுகிறேன். வேறுபாடுகள் வேலையில், உடையில், உணவில், இருப்பிடத்தில் இருக்கப்போவதில் எனக்கு ஆட்சேபனை எதுவுமில்லை. உள்ளத்தில் மட்டும் வேண்டாம் என்பது என் ஆசை

பள்ளியில் குழந்தைகளை சேர்பதற்கென என் ஆராய்ச்சியை தொடங்கினேன். அரசு பள்ளியில் படித்ததனால் அரசு பள்ளியில் சேர்ப்பதுதான் சரி என்பது என் எண்ணம். "School - சேத்தரதுக்கு எதுக்கு ஆராய்ச்சி" தீப்பெட்டி வாங்குவதற்கே ஆராய்ச்சி செய்யும் மனோ வியாதி எனக்குள்ளதை அறிந்தும் என் மனைவி என்னை சபித்தாள். இன்பமாக சாபத்தை ஏற்று ஆராய்ச்சியை துவங்கினேன்அரசு பள்ளிகளிலும், தனியார் Matriculation பள்ளிகளிலும் சமச்சீர், CBSE, ICSE, IGCSE, IB, Montessori என பல்வேறு பாடத்திட்டங்கள், ஒவ்வொன்றுக்கும் அதனுடைய நன்மை, தீமைகள், அனைத்தையும் பட்டியலிட இந்த முறை வெள்ளை நிற உடையில் வந்து என் மனசாட்சி என்னை ஏகமாய் திட்டியது.

ஆசிரியர் ஒருவருடன் பேசும்போது, அவர் இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் அறிவுடன் விளங்குவது, அங்கு நல்ல முறையில் பாடம் நடத்தப்படுவதால் அல்ல என்றும், அங்குள்ள மாணவர்கள் தாங்களாகவே படிக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்வதனாலேயே என்றும் கூறினார். ஆம் பாடம் நல்ல முறையில் கற்பிக்கப்படுவதைவிட, மாணவர்கள் தாங்களாகவே கற்றுக்கொள்ளும் அறிவை பெற்றால் அது மேன்மையானதாக இருக்கும். இன்று உள்ள பல தனியார் கல்வி நிறுவனங்கள் சிறந்த முறையில் கற்பிக்கின்றன அனால் தானாக கற்றுக்கொள்ளும் அறிவை அத்தகைய மாணவர்கள் இழக்கிறார்கள். பின்னாட்களில் சுயமாக எதையும் கற்க சிரமப்படுகிறார்கள். எதையும் சுயமாகவும், தாய்மொழியிலும் கற்பதே அழமாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமையும்.

சுயமாக சிந்திக்கும் அறிவே, கொசு அடிப்பதில் ஆரம்பித்து, ஓட்டை விழுந்த ஒசோனை சரிசெய்வதுவரை நம்மை தேவையானவாறு செயல்படவைக்கும். அறிவியல் முன்னேறியே இந்த காலத்தில் அதை பயன்படுத்தி எந்தவிதமான தீங்கும் விளைவிக்காத கண்டுபிடிப்புகளை நிகழ்த்த நாம் தடுமாற, இந்த வசதிகள் எதுவும் இல்லாத பழங்காலத்தில் அறிய கண்டுபிடிப்புகளை நம் முன்னோர்கள் நிகழ்த்தியது இதனால்தான். கல்வி என்பது இதுதானென்று விவேகானந்தரும் விவரிக்கிறார்


பள்ளி பற்றிய என் ஆராய்ச்சி இன்னும் முழுமை அடையவில்லை.........(ஆராய்ச்சி முடியறதுக்குள்ள பையன் பெருசாயிட்டா என்ன பண்றது?)

எனக்கு மங்கலாக ஞாபகம் இருக்கிறது, எனது சிறு வயதில், 90- தாண்டிய என் பாட்டி தினமும் குறைந்தது 10 முறையாவது "எல்லாம் கலி காலம் கலி காலம்" என்பார். நியூட்டன் நேரில் வந்து சொன்னாதான் நம்புவேன் என்று அடம்பிடிப்பேன். அனால் இப்போது, குடிக்க மோர் தந்த நாட்டில் போலியாக சுத்திகரிக்கப்பட்ட கட்டண நீர், ஆன்மிகம் அருள வேண்டிய தமிழ் ஆதீனம் கன்னடத்தில் சட்டப்படி ஜாமீன் கோருகிறார் பால் வழக்கிற்கு அல்ல பாலியல் வழக்கிற்கு, 5-ஆம் வகுப்பு படிப்பதற்கு கல்விக்கட்டணம் செலுத்தமுடியாமல் படிப்பை பாதியில் கைவிடும் மாணவன், அவன் பார்க்கும் கிரிக்கெட்- ஆடும் கிரிக்கெட் வீரரும், அவரை விலைக்கு வாங்கிய நடிகரும் சில ஆயிரம் கோடிகளை சம்பாதித்தவுடன், அந்த 5-ஆம் வகுப்பு கூட படிக்காத அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டமும், பாரத ரத்னா பரிந்துரையும், இது போதாதென்று சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கணக்கில் உள்ள அனைத்து பணமும் கருப்பு பணம் என்று கூறி விட முடியாது என மத்திய நிதியமைச்சர், இனிமேல் ஜனநாயக தேர்தல் என்பதை சொந்த செலவில் சூனியம் என மாற்றிக்கொள்ளலாம். "எல்லாம் கலி காலம் கலி காலம்" 


புவன் - யுவனுக்காக 

முனுசாமி 


(அடுத்து: வாழ்க்கை #1 \ 22-06-2012) 
தங்களின் கருத்துக்களை Comments-ல் இடவும். (கேள்விகள் வரவேற்கப்படுகின்றன)