Monday, April 1, 2013

வைணவ கமல்ஹாசன்


தன்னை ஒரு நாத்திகவாதியாக காட்டிக்கொண்டிருப்பது உண்மைதானா என்னும் ஐயம் எனக்கு வெகு காலமாக உண்டு. கமலின் சொந்த தயாரிப்புகளில் (இயக்கமும் சேர்த்து) அவரது வைணவ வெளிப்பாடுகளை என்னால் உணர முடிந்தது. இதை பார்பன வெறி என கமலின் எதிரிகள் பயன்படுத்தியது உண்டு. எனக்கு அந்த எண்ணம் இல்லை.

கடவுள் என்பது ஒருவனுடைய அந்தரங்க விருப்பம் அதில் மற்றவர்களுக்கு இடம் இல்லை அதேபோல் மற்றவர்களுடைய பக்தி மார்கத்தில் நமக்கும் இடம் இல்லை. என் வாதம் கமல் தன்னை வைணவம் சார்ந்தவராக காட்டிகொள்ளாமல் விமர்ச்சனதிர்க்கு பயந்து ஏன் நாத்திகனாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதே.

ஹேராம் - படத்தில் தன்னை ஒரு பார்பன இந்துவாகவும், வைணவ மரபின் படி, ராமர் அவதாரமாக தன்னை நினைத்து கெட்டவைகளை அழிக்க புறப்பட்டதாகவும் காட்டுகின்றார். உண்மையில் நடந்த நிகழ்ச்சியா? அல்லது புனைவு தானா? எவ்வாறு இருந்தாலும் திரைப்படத்தில் மாற்றி காட்டியிருக்கலாம். ஏன் முயற்சிக்க வில்லை? அல்லது திட்டமிட்டு அமைக்கப்பட்டதா?

தசாவதாரம்மகாவிஷ்ணுவின் அவதாரங்களை, வைணவ குடும்பகளை மையமாக வைத்து, உலகின் அழிவிலிருந்து பெருமாள் காப்பதாக காட்டி விட்டு, கடவுள் இல்லை என்பதை வார்த்தைகளால் மட்டும் சொல்லும் படம். நாத்திக வாதியாக படம் எடுக்க கடவுள் பற்றிய எந்த அடையாளமும் இன்றி காட்சிகளை அமைக்க கமலால் முடியும் என்பது நாம் அறிந்ததே.

விஸ்வரூபம்ஒரு இந்துவா முஸ்லிமா எனும் விளக்கமும் அற்ற நாயகனின் வைணவ பெயர் விஸ்வநாத். படத்தின் பெயரும் வைணவ கடவுளுக்கு மட்டும் பொருந்தும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எந்த ரூபமும் எடுக்க முடியும் என்றும் தீயவைகளை அழிக்க தேவைப்படும் போது தன்னை மாற்றிக்கொள்வதாக பாட்டு மற்றும்  படமும் அமைக்கப்பட்டுள்ளது. தான் செய்து கொண்டிருக்கும் காரியங்களின் விளைவுகளை நன்கு அறிந்தவர் கமல். ஏன் வேறொரு கடவுளை மையப்படுத்தாமல் வைணவத்தை இவர் போற்ற வேண்டும்? ஏன் அதை மறைக்க வேண்டும்?.

புவன்  யுவனுக்காக
முனுசாமி 

Thursday, January 31, 2013

விஸ்வரூப தடை


கமல்ஹாசன் பணக்காரரா இல்லையா? அவர் நேர்மையானவரா? ஒழுக்கமானவரா?

இந்த கேள்விகள் நம் விவாதத்திற்கு தேவையற்றது. இந்த கேள்வி இப்போது தமிழ் நாட்டில் மட்டுமல்லாது நம் பாரிற் சிறந்த பாரதத்திலும் யாருக்கும் பொருந்தாததை நாம் வழக்கம் போல் ஒத்துக்கொள்ள வேண்டியது இல்லை.

இந்திய துணைக்கண்டத்தில் நடக்கும் கலியுக சமாச்சாரங்களை மக்கள் அவ்வப்போது விவாதித்துக்கொண்டும், மாற்று வழிக்காக ஏங்கிக்கொண்டும், வேறுவழியில்லாமல் பொருத்துக்கொண்டும் இருக்க, கோடிகளை தாண்டிய நம் ஊழல்வாதிகள், தங்களது கட்டுப்பாட்டில் மக்களை வைத்திருப்பதாக நம்பிய சமயம் அவர்களை அசைத்துப் பார்த்தது அவர்களுக்கு சற்றும் தெரியாத தொழில்நுட்பம் - சமூக வலைத்தளங்களின் வாயிலாக.

ரௌடிகளால், அறிக்கைகளால் பணத்தால் ஒன்றும் செய்யமுடியவில்லை2Gல் லட்சம் கோடிகளை தொட்ட அவர்களால் FB-ல் தாங்கள் தாக்கப்படுவதை தடுக்க (ஒடுக்க) முடியவில்லை. வலைத்தளத்தில் அனைவரும் ஒன்றுபடுவது அவர்கள் (நாமும்) எதிர்பாராதது. இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு, கைது செய்த காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு என அரசாங்கமும், நீதித்துறையும் குழப்பத்தின் உச்சத்தை தொட்டன. இதற்கு முன்னரும் தகவல் தொழில்நுட்ப சட்டம் மூலம் பலர் தண்டிக்கப் பட்டிருந்த செய்தி இதன் மூலம் வெளிவந்தது.

இதன்மூலம் இந்த சமுதாயம் என்ன எதிர்பார்க்கின்றது?. இதுபோன்ற வலைதளங்களில் மட்டும் அல்லாது மற்ற ஏனைய வழிகளிலும் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பவர்கள் அரசியல், மதம், ஆன்மிகம் மற்றும் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட எந்த கருத்தையும் முக்கியமாக இந்தத் துறைகளில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டக்கூடாது என்பதா? எனில், வேறு எதைப் பற்றி பேசுவது? நடிகைகளில் தொ......   பற்றியா? உண்மையில் கண்டிக்கப்படவேண்டியது நடிகைகளானாலும் அவர்கள் இவ்வாறு சித்தரிக்கப்படுவதே ஆகும். அவர்களது தொழில் ரீதியாக அவர்கள் உடுத்தும் ஆடைகளை பிடிக்காதவர்கள் அவர்களை பார்க்கவோ, அவர்களை பற்றி பேசவோ கூடாது. ஒரு தவறான செயலை எதிர்கொள்வதில் முதல் படி அதனை தவிர்ப்பதே ஆகும். இதெல்லாம் தப்பு என்றுவிட்டு ஒளிந்து பார்ப்பது அல்ல.

அப்படியானால் கருத்துச் சுதந்திரம் என்பது?
உபத்ரவம் (அர்த்தம்(?)) இல்லாத கருத்துக்களை கூறுவதா?

பல்வேறு அரசியல் பின்னணியில் ஒரு திரைப்படம் திரையிட அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றதுCENSOR BOARD அனுமதித்த பின்னரும்COURT அனுமதித்த பின்னரும். CENSOR BOARD-ல் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக செய்தி வந்துள்ளது. சரிதான்..... இந்தியாவில்எதுவும் நடக்கும். எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான். இனி வரும் காலங்களில் ஒருவன் நேர்மையான முறையில், அனுமதி பெற்று, அனைத்து கட்டணங்களையும் TAX-களையும் கட்டி, முறையாக ஒரு BUSINESS செய்தால், அது ஒருவேளை பலம் மிக்க ஒருவருக்கோ அல்லது ஒரு சிலருக்கோ அது பிடிக்கவில்லையெனில், அவன் COURT-க்கு சென்றால் கூட அவனால் பிழைக்க முடியாமல் போய்விடுமா? என்பதுதான்.

யாருங்க அதுஇதுலே என்ன சந்தேகம்னு கேக்கறது?

அனைவருக்கும் பிடிக்கும் வேலையை செய்யவேண்டும் எனில்தொழில்” தான் செய்ய வேண்டும். வழக்கம் போல் ஆண்கள் பாடு திண்டாட்டம் தான்.

இந்தியாவில்எதுவும் நடக்கும்

அனால் உறங்காதீர் ஏனெனில்

எவர்க்கும் நடக்கும்” நாளை நமக்கும்.


புவன் - யுவனுக்காக 
முனுசாமி 

(அடுத்துகடவுளின் உருவம் )