Saturday, May 12, 2012

வன்னகம்

முதல் பதிவு



என் ௪(4) வயது குழந்தைகளிடம் நான் வளர்க்க விரும்புவது

 

௧. படம் வரைதல் முதலிய உபத்ரவம் இல்லாத, நன்மை மட்டும் செய்யும்  பொழுதுபோக்குகளை
௨. தெரிந்ததை சொல்லிக்குடு (அல்லது தெரியாததை கேள்)
௩. வன்முறை இல்லாத விளையாட்டுகள் (அதிக நேரம்)
௪. தொலைக்காட்சி, மொபைல் போன், மின்னணு உபகரணங்கள், .... ஆகியவற்றை பயன்படுத்தும் முன் அவற்றை பற்றிய அனைத்து(?) அறிவியலையும் தெரிந்துகொள்ள (முயன்று - தெரிந்துகொண்டாலும் (அ) அவற்றின் மீது வெறுப்பு வந்தாலும் நலம்)
௫. அனைவருடனும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் பழக
.................



 



(நான் மற்றும் எனது மகன்(கள்) வரைந்த படம்)


எங்கோ படித்த ஞாபகம், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தங்களால் சென்ற காலத்தில் செய்ய இயலாததை செய்யுமாறு வற்புறுத்துகிறார்கள் என்று. வற்புறுத்.... - தவறுதான் அனால், ஒரு அப்பா தன் மகன் தன்னைவிட சற்றாவது (ஒரு படி) முன்னேற வேண்டும் என நினைப்பது அவனது குறைந்தபட்ச/அதிகபட்ச கடமை/உரிமையாகும்.



குழந்தைகள் என்னிடம் விரும்பாதது

 

௧. ஆர்வத்தை தூண்டும் படங்களை விடுத்து மொக்கை படங்களை வரைதல்
௨. அவசியம் இல்லாமல் திட்டுவது (டேய் சண்டை போடதீங்கடா - "அம்மா அப்பா திட்டிட்டார்")
௩. இந்த கார் பொம்மையை சாயந்தரம் வரைக்காவது ஒடைக்காம வெச்சுக்குங்க (வாங்கும்போது - "சரி", 1 மணி நேரம் கழித்து - "நான் ஒன்னும் பன்னல அதேதான் ஒடஞ்சு போச்சு")
௪. பாப்பா மணி ஒன்னு ஆச்சு பாப்பா தூங்குங்க பாப்பா ("வரமாட்டங்குது")
௫. இன்னைக்கு அந்த கடை லீவு நாளைக்கு கூட்டிட்டு போறேன் ("அப்படீன்னா இப்போ LAYS")
௬. அய்யே... அந்த பெரிய கார் நல்ல இருக்காது நாம இந்த சின்ன காரை வாங்கிக்கலாம் (இல்லை அதுதான் நல்ல இருக்கு)
௭. சொல்ற பேச்சை கேள்
௮. டிவி-யையே பார்த்துட்டு இருக்காமல் வேற எதாவது விளையாடலாம் இல்ல.
................
அனாலும் என் குழந்தைகள் நான் இருக்கும் போது என்னை விடுத்து மற்ற யாரிடமும் போவது இல்லை



மனிதன் மனிதனாக (ஆக) இயற்கை கொடுத்த வாய்ப்பு - குழந்தைகள்
மேலும் குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமானதும் நாம் தவறுவதும் "முதலில் நாம் நம்மை திருத்திக்கொள்வது"


புவன் - யுவனுக்காக
முனுசாமி




(அடுத்து : இது போல் படம் வரைவதால் வரும் நன்மைகள்)

No comments:

Post a Comment