Tuesday, May 22, 2012

கல்விமுறையில் மாற்றம் தேவை

அன்று எளிமையாகவும் ஆழமாகவும் இருந்த வாழ்கையை நாம் இன்று COMPLICATE-ஆகவும் அர்த்தமற்றதாகவும் ஆக்கிக்கொண்டோம். 

அதிகாலையில் எழுந்து நீராகாரம் குடித்து (உணவே மருந்து), செருப்பு அணியாமல் காட்டுக்கு நடந்து சென்று (அக்கு பஞ்சர்), வழியில் வேப்பம் குச்சியில் பல் துலக்கி (ஆரோக்கியமான Tooth Paste), இள வெயிலில் வியர்வை சிந்த வேலை செய்து (உடற்பயிற்சி), காலை விடு திரும்பி பசியாற உணவு உண்டு (STAR சமையல்), அடுத்த வேளை வேலை.... இன்று இவை அனைத்தும் டிவி-நிகழ்ச்சிகளாகிவிட்டது. Pressure, Sugar உள்ளிட்ட அனைத்து வியாதிகளுடன் நாம் அந்நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருக்கிறோம்



+2 ரிசல்ட் வந்துவிட்டது வழக்கம் போல் முதல் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்கள், டிவி, fm , News பேப்பர் ஆகியவற்றில் தான் அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது, புரிந்து படிப்பது, படித்ததும் எழுதி பார்த்தது ஆகியவைதான் காரணம் என்றும் தனக்கு உதவி செய்த அம்மா, அப்பா, அத்தை, தம்பி, டீச்சர், பக்கத்துக்கு வீடு பாலு ஆகியோருக்கு நன்றி என்றும் சொல்வார்கள், கேக் ஊட்டுவார்கள், சாக்கலட்கொடுப்பார்கள். மதிப்பெண் குறைவாக எடுத்து அடி, திட்டு வாங்கி சோகமாக சில நாட்கள் சிலருக்கு.




எது எப்படி இருப்பினும், படித்து மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.



தேர்வில் தேறிய, தவறிய எத்தனை பேர்க்கு கல்வியின் அவசியம் மற்றும் வாழ்வில் அதன் பங்கு தெரியும் என்பது கேள்விக்குறியே. தான் எடுத்த மதிப்பெண்கள் குறைவாக இருந்தபோதும் அதை உளமார ஏற்று மகிழும் முதிர்ச்சி அனைவருக்கும் இருக்க வேண்டும். ஆம் தன் படிப்பையும், எண்ணத்தையும், வாழ்க்கையையும், செயல்களையும் எவன் ஒருவன் தெரிந்து, புரிந்து, அனுபவித்து மேற்கொள்கிறானோ அவனே வாழ்வில் சிறக்க முடியும் என சுவாமி விவேகனந்தர் கூறுகிறார். தன்னுடைய அனைத்து செயல்களுக்கும் தானே பொறுப்பேற்று அதன் நன்மை, தீமைகளை துணிச்சலாக எதிர்கொள்பவனையே அவர் வீரமான மானிடனாக குறிப்பிடுகிறார்.


பொதுவாக எந்த லாபமும் இல்லாமல் விவேகனந்தரையும், வீரத்தையும் யாரும் விரும்புவதில்லை

கல்வி நிறுவனங்கள் தீபாவளிக்கு தயாராகி விட்டன. கல்வி விற்கப்படுவது தவறா?. 1980 -களில் பெரும் மதிப்புடனும், 2000 -களில் மதிப்புடனும்,  இப்போது மதிப்பற்றும் இருக்கும், அதாங்க பி.இ., அதை படிக்க மாணவர்கள் தயாராகி விட்டார்கள், பெற்றோர்களும் கனவுக்காகவோ, ஆசைக்காகவோ, கடமைக்காகவோ, கடனுக்காகவோ, வேறு வழியில்லாமலோ, சில சமயம் என்னவென்று தெரியாமலோ, தங்களது பணத்தை தொலைக்க தயாராகிவிட்டனர். இனிவரப்போகும் 4 வருடங்கள் மாணவர்களுக்கு வசந்தகாலமாக இருக்கும் (இப்பெல்லாம் டிபன்-ல சாப்பாடு கொண்டுபோரதில்ல... Image spoil - ஆகுதாம்). பெற்றோர்கள் மகன் நான்கு வருடங்களில் குடும்பத்தை தாங்கும் வலிமையோடு வந்துவிடுவானென நம்புகிறனர். மூன்றாவது வருடத்தில் தங்களது எதிர்பார்ப்பு தவறு என்பதை உணர்கின்றனர். பெற்றோர்களையும், மாணவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. இன்று மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் அப்படிப்பட்டவை,

நன்கு படித்து ஒரு மெட்ரோ சிட்டி-ல் நல்ல சம்பளத்தில் வேலைக்கு செல்ல வேண்டும்
சுமாராக படித்து ஓரளவு சம்பாதித்து, தங்கையின் திருமணதிற்கு உதவவேண்டும்
படிக்காவிட்டாலும் தன்னளவு சம்பாதித்து தன்னை பார்த்துக்கொள்ள வேண்டும்

இன்று இதில் ஏதேனும் ஒரு பிரிவில் வரும் ஒருவன், ஒரு கட்டத்தில் வாழ்கையையும் சமுதாயத்தையும் புரிந்து கொள்கிறான். சம்பாதிக்கும் ஒருவன் அதை தன் மகிழ்ச்சிக்காக செலவு செய்வது தவறில்லை என வழிநடத்தப்படுகிறான். மற்றவர்களுக்கு உதவி செய்வது கட்டாயமில்லை எனவும் தவறாக சம்பதிப்பவர்களை விட தான் மேல் எனவும் நம்புகிறான். மற்றவர்களை போலவே தனக்கும் மகிழ்ச்சியாக வாழ உரிமை உள்ளதாகவும், அனால் நேர்மையாக சம்பாதிக்க சமுதாயம் தன்னை விடவில்லை எனவும் தவறு செய்பவன் கூறிக்கொள்கிறான். முடிவில் தவறாக இருப்பினும் சம்பாதிப்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நாமும் கல்வி விற்கப்படுவதை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.

சரி இனி தலைப்புக்கு வருவோம். கல்வி முறையில் சட்ட ரீதியான, கல்வி ரீதியான, விஞ்ஞான ரீதியான மாற்றங்களை காட்டிலும், மக்கள் மன  ரீதியான மாற்றம்தான் முக்கியம். விவேகானந்தரை பின்பற்றினால் தவிர கல்வியையும், சமுதாயத்தையும் ஒருங்கே திருத்தமுடியாது. விவேகானந்தர் கல்வி பற்றி என்ன கூறியுள்ளார்.. 

புவன்-யுவனுக்காக
முனுசாமி

(அடுத்து: கல்வி பற்றி விவேகானந்தர்\28-05-2012)

No comments:

Post a Comment