Monday, May 14, 2012

படம் வரைவதால் ஏற்படும் நன்மைகள்


Picasso (wikipedia)
படம் வரைவது (4 வயது குழந்தையை) நிச்சயம் பிகாச்சோ (Pablo Diego José Francisco de Paula Juan Nepomuceno María de los Remedios Cipriano de la Santísima Trinidad Ruiz y Picasso) ஆக்கிவிடாது, அனால் நிச்சயம் கீழ்காணும் திறமைகளை வளர்த்தும். அடைப்புக்குறிக்குள் இருப்பது பிகாச்சோ-வின் இயற்பெயர் (spanish-ல், பயப்பட வேண்டாம்).
௧. அனைத்தையும் கூர்ந்து கவனிக்கும் பழக்கத்தை (Observation)
௨. Scale மற்றும் Proportion பற்றிய அறிவை
௩. ஆரம்பத்தில் சரியாக வராவிட்டாலும், முயற்சி செய்யும் பழக்கத்தை
௪. TV பார்க்காத பழக்கத்தை

எனது மகன்கள் இப்போதெல்லாம் வெளியில் செல்லும் போது பார்க்கும் அனைத்தை பற்றியும் அவை வரையப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். ("பாத்தியா லாரியோட லைட் பெருசாதான் இருக்கும், நான் அப்பவே சொன்னனில்லே"). படம் வரைந்தபின் எதாவது ஒன்று பெரிதாகவோ அல்லது சின்னதாகவோ தோன்றினால் அதை அழித்து திருத்திக்கொள்கிறார்கள். சும்மா இருக்கும் போதெல்லாம் சாக் பீஸ்-ஐ கையில் எடுத்துக்கொள்கிறார்கள் (மாதம் 1 பாக்ஸ்).

சமீபத்திய ஒரு கணக்கெடுப்பின் படி இந்தியர்கள் இணையத்தை பயன்படுத்துவதில் உலகளவில் இரண்டம் இடத்தில் உள்ளதாகவும், அவர்கள் (நாம்தான்) இணையத்தில் அதிக அளவு நேரத்தை செலவு செய்வதாகவும் சொல்கிறது. வழக்கம் போல் இதை நாம் பாராட்டாகவே எடுத்துக்கொள்ளலாம் (வேற வழி). அனால் உண்மையில் இணையப்பயன்பாடு நமக்கு தனிமனித மற்றும் சமுதாய நன்மையை உருவாக்குகிறதா?

எங்களது முதிய ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் திறமை மற்றும் அறிவு மலுங்கிக்கொண்டிருப்பதாகவும் அதற்கு கணிப்பொறிகள் மிக முக்கிய காரணம் எனவும் சொல்கிறார். இதை நானும் ஆமோதிக்கிறேன். இன்று மாணவர்கள் கணக்கிடும் திறமையும், கால்குலேட்டேர் பயன்படுத்தும் திறமையும் ஒன்று என எண்ணுவதுடன் இதில் கால்குலேட்டேர் பயன்படுத்துவது தான் எளிய, சாதுர்யமான வழி எனவும் எண்ணுகிறார்கள் முடிவில் இவர்களுக்கு MATRIX MULTIPLICATION கடைசி வரை தெரிவதில்லை.  இதில் வேடிக்கை என்னவென்றால், MM நன்கு தெரிந்த ஒருவன்தான் கால்குலேட்டேர் தயாரித்து தெரியாத ஒருவனுக்கு அதை விற்கிறான் MM தெரியாதவன் கால்குலேட்டேர் வாங்குவதை தவிர வேறு வழியில்லை.

நம் முன்னோர்கள் விற்பவர்களாக இருந்தார்கள் நாம் இன்றைய நிலையில் நிறைய வாங்குகின்றோம்.

நாம எப்ப யாவாரி ஆரது...??????

புவன் - யுவனுக்காக
முனுசாமி

(அடுத்து : இன்றைய கல்வி முறை)


No comments:

Post a Comment